நமீபியா குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான பழமை வாய்ந்த வெல்விட்சியா மிரபலீஸ் விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கெளரவிப்பு.உலக அமைதி, நீதி மற்றும் சமூக பொருளாதார முன்னேற்றத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்ததற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நமீபியா குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான மிகப் பழமை வாய்ந்த வெல்விட்சியா மிரபலீஸ் விருது அளிக்கப்பட்டது.நமீபியாவின் மிக உயரிய விருது எனக்களிக்கப்பட்டதை பெருமையாகவும் கெளரவமாகவும் கருதுகிறேன். 140 கோடி இந்திய மக்களின் சார்பாக இந்த விருதை பணிவுடன் ஏற்றுக்கொள்கிறேன்.நமீபியா அதிபருடன் உடன் பிரதமர் மோடி.இரு தரப்பினருக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகின.பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி, வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் அங்கு குதூகலமாக பிரதமர் மோடி மேளம் கொட்டி மகிழ்ந்தார்.