
பாரிஸ்: பிரான்ஸ் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள், 'அனைத்தையும் தடுப்போம்' என்ற பிரச்சாரத்தை செயல்படுத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பேய்ரு தலைமையிலான அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தது. இதையடுத்து பிரான்சுவா பேய்ரு பதவியை ராஜினமா செய்தார். புதிய பிரதமராக செபஸ்டியன் லெகோர்னுவை அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் நியமித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 'அனைத்தையும் தடுப்போம்' என்ற பிரச்சாரம் சமூக ஊடகங்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டது.