royalenfield1_0906chn_1

புதுதில்லி: மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளரான ராயல் என்ஃபீல்ட், ஃபிளிப்கார்ட்டுடன் இணைந்து அதன் 350 சிசி போர்ட்ஃபோலியோவை விற்பனை செய்ய உள்ளதாக இன்று தெரிவித்தது.

புல்லட் 350, கிளாசிக் 350, ஹண்டர் 350, கோன் கிளாசிக் 350 மற்றும் மீடியோர் 350 ஆகியவை செப்டம்பர் 22 முதல் பெங்களூரு, குருகிராம், கொல்கத்தா, லக்னோ மற்றும் மும்பை ஆகிய ஐந்து நகரங்களில் பிளிப்கார்ட்டில் கிடைக்கும் என்று நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஃபிளிப்கார்ட்டில் தங்களுக்குப் மிகவும் பிடித்த ராயல் என்ஃபீல்ட் 350 சிசி மோட்டார் சைக்கிளை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள், செப்டம்பர் 22 முதல் முழு ஜிஎஸ்டி சலுகைகளையும் பெறுவார்கள் என்றது நிறுவனம்.

ஃபிளிப்கார்ட்டுடன் கூட்டு சேர்வதால், எங்களுக்கு டிஜிட்டல் வாடிக்கையாளர்களைச் சந்திக்க முடிகின்றது. அவர்கள் தங்கள் மோட்டார் சைக்கிள்களை ஆன்லைனில் ஆராய்ந்து வாங்குவதற்கு வசதியான வழியை இதன் மூலம் பெறுவர் என்றார் ராயல் என்ஃபீல்ட் தலைமை நிர்வாக அதிகாரி பி. கோவிந்தராஜன்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest