fauja-singh-runner

உலகப் புகழ்பெற்ற மிகவும் வயதான மாரத்தான் வீரர் பலியான விவகாரத்தில் வெளிநாடுவாழ் இந்தியர் ஒருவரை பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்தனர்.

புகழ்பெற்ற மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் ஃபௌஜா சிங் பலியான விவகாரத்தில் 30 வயதுடைய வெளிநாடுவாழ் இந்தியர் அமிர்த்பால் சிங் தில்லான் என்பவரை சம்பவம் நடந்த 30 மணி நேரத்திற்குள் பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்து, விபத்துக்கு காரணமான ஃபார்ச்சூனர் காரையும் பறிமுதல் செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரின் கர்தார்பூரில் உள்ள தாஸுபூர் கிராமத்தைச் சேர்ந்தவரான அமிர்த்பால் சிங் தில்லான், செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டு, தற்போது போக்பூர் காவல் நிலையத்தில் விசாரணையில் உள்ளார். அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், போலீஸ் காவலில் எடுக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஜலந்தர் காவல் துறையினர் கபுர்தலாவுக்குச் சென்று வரீந்தர் சிங்கிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது, கனடாவிலிருந்து சமீபத்தில் இந்தியாவுக்கு வந்த அமிர்த்பால் சிங் தில்லான் என்ற வெளிநாடுவாழ் இந்தியருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு காரை விற்றுவிட்டதாக வரீந்தர் தெரிவித்தார்.

விசாரணையில் போக்பூரிலிருந்து கிஷாகர்கருக்குச் சென்று கொண்டிருந்த தில்லான், பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான பியாஸ் கிராமத்தில் ஃபௌஜா சிங் மீது மோதியுள்ளார்.

அவர் 5 முதல் 7 அடி வரை தூக்கி வீசப்பட்டுள்ளார். மேலும், ஃபௌஜா சிங் மீது காரை ஏற்றியதையும் தில்லான் ஒப்புக்கொண்டுள்ளார். தில்லானுக்கு மூன்று சகோதரிகள் இருப்பதாகவும், அவரது தாயார் கனடாவில் வசிப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

பிஎன்எஸ் பிரிவுகள் 281 கீழ் பொது வழியில் வேகமாக வாகனம் ஓட்டுதல் மற்றும் 105 கீழ் கொலை வழக்கு ஆகியவற்றில் தில்லான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

NRI arrested in hit-and-run death of legendary marathoner Fauja Singh

இதையும் படிக்க : உலகின் வயதான பஞ்சாப் மாரத்தான் வீரர் சாலை விபத்தில் பலி!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest