
வாஷிங்டன்: ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் உடனான சந்திப்பை அடுத்து, வரும் திங்கள்கிழமை உக்ரைன் அதிபர் விளாதிமிர் ஜெலன்ஸ்கியை, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சந்திக்க உள்ளார்.
இது தொடர்பாக ட்ரம்ப் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், "அலாஸ்காவில் நிகழ்ந்த சந்திப்பு சிறப்பானது, வெற்றிகரமானது. ரஷ்ய அதிபர் விளாடிதிர் புதினுடனான சந்திப்பு மிகவும் சிறப்பாக இருந்தது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, மிகுந்த மதிப்புக்குரிய நேடோ பொதுச் செயலாளர் உள்ளிட்ட பல்வேறு ஐரோப்பிய தலைவர்களுடன் நேற்றிரவு தொலைபேசியில் பேசினேன்.