
பாக்கியலட்சுமி தொடரில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை சுசித்ரா, தற்போது புதிய தொடரில் நடிக்கவுள்ளார். இந்தத் தொடர், அவரின் தாய்மொழியான கன்னடத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.
வங்க மொழியில் உருவான ஸ்ரீமோயி என்ற தொடரைத் தழுவி எடுக்கப்பட்ட பாக்கியலட்சுமி தொடர் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. விஜய் தொலைக்காட்சியில் 2020 ஜீலை முதல் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடர், தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இத்தொடரின் படப்பிடிப்பு தளத்தில் இறுதி எபிஸோட் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. படப்பிடிப்பு தளத்தில் பாக்கியலட்சுமி தொடரின் இறுதி நாளை குழுவினர் கேக் வெட்டி நெகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இதனிடையே இத்தொடரில் பாக்கியலட்சுமியாக நடித்த நடிகை சிசித்ரா, புதிய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தத் தொடர் அவரின் தாய் மொழியான கன்னடத்தில் ஒளிபரப்பாகவுள்ளது.
இதனை சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்களுடன் அவர் பகிர்ந்துள்ளார். அதில், ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

பாக்கியலட்சுமி தொடர், 5 ஆண்டுகளுக்கும் மேலாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் என்ற பெருமையப் பெற்றிருந்தாலும், கலவையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது.
எனினும், இந்தத் தொடரில் பாக்கியலட்சுமியாக நடித்த சுசித்ராவின் நடிப்பு பலரால் பாராட்டப்பட்டது. இதனால், கன்னடத்தில் இவர் நடிக்கும் புதிய தொடருக்கு தமிழில் இருந்து ஏராளமான ரசிகர்கள் இருப்பார்கள் என பலர் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | நண்பர்களைத் தவிர்த்து… குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை!