
புதுச்சேரியைச் சேர்ந்த உலக அழகி சான் ரேச்சல், தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாள்களாக சிறுநீரக பிரச்னைக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிக அளவு ரத்த அழுத்த மாத்திரைகளை விழுங்கி இன்று (ஜூலை 13) தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
நிறத்தை பொருட்படுத்தாமல் தனது திறமையின் காரணமாக மாடலிங் துறையில் அசத்திவந்த சங்கர பிரியா என்னும் சான் ரேச்சல் புதுச்சேரியிலுள்ள காராமணி குப்பத்தில் வசித்துவந்துள்ளார்.
கடந்த சில நாள்களாக சிறுநீரக பிரச்னை காரணமாக ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். இதனிடையே, இன்று தனது வீட்டில் அதிக எண்ணிக்கையிலான ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
பேஷன் நிகழ்ச்சிகள் பலவற்றை நடத்தியதில் ஏற்பட்ட இழப்பு காரணமாக உயிரை மாய்த்துக்கொண்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து புதுச்சேரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உலக அழகி
2020-2021 ஆண்டுகளில் மிஸ் பாண்டிச்சேரி, 2019-ல் மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு, அதே ஆண்டில் மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் என பல பட்டங்களை வென்றுள்ள ரேச்சல், கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டத்தையும் வென்றுள்ளார்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
இதையும் படிக்க | ஏரியில் விளையாடிய 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!