valcano1

பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஆச்சரியத்துக்குரிய பாபா வங்கா, ஆகஸ்ட் மாதம் இரட்டை நெருப்புப் பிழம்புகள் உருவாகும் என்ற கணிப்பு மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

கடந்த 1996ஆம் ஆண்டிலேயே மறைந்துவிட்ட பாபா வங்கா என்ற பல்கேரியப் பெண்ணின் கணிப்புகள் இன்றும் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகின்றன.

பாபா வங்கா என்று அறியப்படும் அப்பெண், கண் பார்வையை இழந்த நிலையில், எதிர்காலத்தில் நிகழும் சம்பவங்களை அறியும் திறன் பெற்றதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே அவரது பல கணிப்புகள் நடந்தும் உள்ளன.

இயற்கை உள்ளிட்ட பல்வேறு பேரிடர்கள் குறித்த அவரது கணிப்புகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிறைவேறினாலும், நிறைவேறாவிட்டாலும், மக்களின் நம்பிக்கை மட்டும் மாறவில்லை.

அந்த வகையில், பல்கேரிய நாஸ்ட்ராடாமஸ் என்று அழைக்கப்படும் பாபா வங்காவின் ஆகஸ்ட் மாத கணிப்பு வெளியாகியிருக்கிறது. இரட்டை நெருப்புப் பிழம்புகள் என்பதே அது.

ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகியிருக்கும் அந்த இரட்டை நெருப்புப் பிழம்புகள் குறித்த விளக்கத்தில், ஒரே வேளையில் பூமியிலிருந்தும், வானிலிருந்தும் நெருப்புப் பிழம்புகள் தோன்றும். இது குறித்து தெளிவான விளக்கங்கள் இல்லை, பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன.

அதாவது, காட்டுத் தீ அல்லது எரிமலை சீற்றம் போன்றவற்றுடன், எரிகற்கள் தாக்குவது அல்லது வானிலை மாற்றங்களால் கடுமையான மின்னல் தாக்குவது போன்றவை நிகழலாம் என்று கூறப்படுகிறது.

அது மட்டுமல்லாமல், பாபா வங்கா மற்றொரு கணிப்பையும் பதிவு செய்திருக்கிறார். மக்கள் விரும்பாத, மக்களின் சக்தியை தாண்டிய அறிவுக்கு மிகவும் நெருக்கமாவார்கள் என்று குறிப்பிட்டிருக்கிறார். அதோடு, திறக்கப்பட்டது ஒருபோதும் மூடப்படாது என்றும் சொல்லியிருக்கிறார்.

இதற்கு, பயோ டெக்னாலஜி அல்லது செயற்கை நுண்ணறிவைத்தான் பாபா வங்கா முன்கூட்டியே கணித்திருக்கிறாரோ என்று மக்கள் கருதுகிறார்கள்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest