
பெரியார் பிறந்த நாளையொட்டி, அவரது திருருவ சிலைக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மரியாதை செலுத்தினார்.
சென்னை பனையூரில் தவெக அலுவலகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பெரியார் பிறந்த நாளையொட்டி தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”பெண்கள் முன்னேற்றம் சுயமரியாதை பகுத்தறிவுச் சிந்தனை சமூக சீர்திருத்தக்கொள்கை வகுப்புவாரி பிரதிநிதித்துவம் போன்ற சீர்திருத்த சிந்தனைகள் வாயிலாக நம் மக்களுக்காக உழைத்த எம் கொள்கைத் தலைவர் தந்தை பெரியாரின் பிறந்ததினமான இன்று சென்னை பனையூரில் உள்ள, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில், அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, வரும் செப். 20-ல் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் தவெக தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இது தொடர்பாக நாகை, திருவாரூர் மாவட்டச் செயலாளர்களிடம், விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
இதையும் படிக்க: காரில் இருந்து பாமக கொடியை அகற்றிய ராமதாஸ்! ஏன்?