AP25187493583933

உத்தரப் பிரதேசத்தில் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட சட்டையை அணிந்து பேரணியில் பங்கேற்ற 4 இளைஞர்கள், அம்மாநில காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தியோரியா மாவட்டத்தில் கடந்த ஜூலை 6 ஆம் தேதி முஹரம் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற இளைஞர்கள் சிலர் பாலஸ்தீன கொடி அச்சிடப்பட்ட டி – ஷர்டுகளை அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த விடியோ பதிவுகள் இணையத்தில் வைரலாகிய நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞர்கள் 4 பேரை நேற்று (ஜூலை 7) காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து அந்த டி – ஷர்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், அவர்கள் 4 பேரின் மீதும் பி.என்.எஸ். 197 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், அந்த இளைஞர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், காவல் துறையினர் விசாரணை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

Four youths who participated in a rally in Uttar Pradesh wearing shirts with the Palestinian flag printed on them have been arrested by the state police.

இதையும் படிக்க: கடலூர் ரயில் விபத்து: ரயில்வே அமைச்சருக்கு தெரியாதா?

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest