
வாஷிங்டன்: போதைப் பொருள் கடத்தல், உற்பத்தியில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில், ஆப்கானிஸ்தான், தி பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, மியான்மர், சீனா, கொலம்பியா, கோஸ்டா ரிகா, தி டொமினிசியன் ரிபப்ளிக், ஈகுவேடார், எல் சால்வடார், கவுதமாலா, ஹைதி, ஹொண்டூராஸ், இந்தியா, ஜமைக்கா, லாவோஸ், மெக்சிகோ, நிகாராகுவா, பாகிஸ்தான், பனாமா, பெரு, வெனிசுலா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகள் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலில் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.