44

ராஜஸ்தானில் போர் விமான விபத்தில் விமானிகள் இருவரும் உயிரிழந்ததாக இந்திய விமானப்படை தகவல் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டத்தின் பானுதா கிராமத்தில் இந்திய விமானப் படையின் ஜாகுவார் போர் விமானம் இன்று(புதன்கிழமை) பிற்பகல் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உள்பட இருவர் பலியானதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த விபத்து தொடர்பாக இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“இந்திய விமானப் படையின் ஜாகுவார் பயிற்சி விமானம் தனது வழக்கமான பயிற்சியின்போது ராஜஸ்தான் சுரு பகுதி அருகே கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானிகள் இருவரும் உயிரிழந்தனர். பொதுச் சொத்துகள் சேதம் ஏற்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை.

விமானிகள் இருவரின் உயிரிழப்புக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களின் குடும்பத்திற்கு துணையாக இருக்கிறோம்.

விபத்திற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளது.

Two Indian Air Force pilots died after a Jaguar trainer jet crashed in Rajasthan’s Churu district on Wednesday.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest