
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
விதி, Destiny , ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது தான் வாழ்க்கை அப்படி இப்படினு இப்போ எல்லாம் ரொம்ப philosophical பேசறோம்.
நிஜமாகவே அப்படி விதியால் வந்த உறவு தான் என் கணவர்.
ஆறாம் வகுப்பில் இருந்து, பத்தாம் வகுப்பு வரை ஒரே பள்ளியில் படித்து, அந்த பள்ளியில் படிக்கும்போது அறிமுகமே ஆகாமல், காலங்கள் கடந்து, பரஸ்பர நண்பர் மூலமாக நெருங்கிய நண்பர்கள் ஆனோம் .
வீட்டில் மாப்பிளை பார்க்கும் வேலை ஆரம்பமானது. என் physical appearance மீது தாழ்வு மனப்பான்மை இருந்தது. எந்த பிரச்சனை என்றாலும் ,அந்த புலம்பலை கேட்கும் ஒரே ஜீவன் என் நண்பன்.

Touch Screen , Facebook , instagram இல்லாத காலம். Mobile வரவு புதிதாக இருந்தது. அப்போது எல்லாம் மொபைல் மாடல் 1100 , மிகவும் பிரபலம். இரவு முழுக்க text message இல் பேசுவோம்.
அந்த காலக்கட்டங்களில் ஆண் நண்பர்களை பார்ப்பது பேசுவது பெரியதொரு குற்றம் , நம் பெற்றோர்கள் தப்பாக நினைக்கவில்லை என்றாலும், உறவுகள் சும்மா இருக்கமாட்டார்கள்.
அப்படி ஒரு நாள் பேசிக்கொண்டு இருக்கும்போது, என் அப்பா எனக்காக ஒரு mechanical engineer மாப்பிள்ளை பார்த்திருப்பதாக கூறினேன்.
கல்யாணத்துக்கு பிறகு, friendship எல்லாம் continue ஆகாது பொண்ணுகளுக்கு, என்று எமோஷனலாக பேசிக்கொண்டு இருக்கும் போது, என்ன தோன்றியதோ தெரியவில்லை, நானே உன்னை கல்யாணம் பண்ணிக்கறேன் என்று கூறியதும், என்னிடம் பதிலே வரவில்லை. வேண்டாம் என்று உடனடியா கூறவும் முடியாமல். என்னை நன்றாக புரிந்து கொண்ட நண்பரை பிரியவும் முடியாமல், ஒரு வாரம் கொடுமையாக சென்றது.
ஒரு middle class family இல் காதல் கல்யாணம் , அதுவும் வேறு வேறு சமூகம், பெற்றோர்களின் கனவை முற்றிலுமாக உடைத்து, என் விருப்பத்தை செய்ய வேண்டும்.
இதில், அம்மாவின் அழுகை, அப்பாவின் மனப் போராட்டம் , புதிதாக கல்யாணம் முடிந்த அக்காவின் உறவுகள், என்னுடைய புது உறவான என் மாமா என்னை பற்றி என்ன நினைப்பார்,அனைத்தும் ஒரு வார தூக்கத்தை, நிம்மதியை கலைத்தது..
புறஅழகிற்கு முக்கியத்துவம் கொடுக்காத என் நண்பனை வேண்டாம் என்று ஒதுக்கவும் முடியவில்லை. அவரை விட எனக்கு ஒரு சிறந்த கணவன் கிடைக்கமுடியாது என்று தைரியமாக
சம்மதம் சொன்னேன். என் கையை பிடித்து, அவர் கூறிய வார்த்தைகள் இன்றும் என் நினைவில் இருக்கிறது. “கவலைப்படாத , எதுவா இருந்தாலும் சமாளிப்போம் “.

காதல் வந்துவிட்டது, குடும்பத்தை சேர்க்க வேண்டுமே, Coffee with DD போல், என்முதல் meeting , ஒருஹோட்டலில் , இட்லி சாம்பார் with என் அத்தை.. என் விருப்பத்தை , என் பெற்றோரிடம் கூற எனக்கு தைரியம் இல்லை, அம்மாவின் கண்ணீருக்கு எப்போதுமே power அதிகம்.
அதனால், அக்கா கணவரான என் மாமாவிடம் கூறினேன். அதனால், அவருக்கு என் மாமாவுடன் meeting . First Meeting success ஆகி, மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் , அடுத்த மீட்டிங்ஐ parkஇல் வைத்து, இருதரப்புக்கும் பிடித்து விட்டது என்பதை, ஹோட்டல்க்கு மொத்த குடும்பமும் சென்று ஒரு குலாப் ஜாமுன் சாப்பிட்டு உறுதிசெய்தார்கள்.
என் பெற்றோர்க்கு நான் கொடுத்த ஒரே நம்பிக்கை, உங்க பொண்ணு, எந்த காரணத்திற்காகவும் உங்களிடம் அழுது கொண்டு வர மாட்டேன், அப்படி பட்டவரைதான் நான் தேர்ந்து எடுத்து இருக்கிறேன் என்னை நம்புங்கள் என்று வாக்கு கொடுத்தேன்.
அடுத்த ஆறு மாதம் கழித்து, உறவினர்கள் முன்னிலையில் உறுதி வார்த்தை. உறவினர்களை இரு வீட்டுக்கும் அழைத்து செல்வார்கள். மாப்பிளைக்கு வாடகை வீடு, வேறு ஜாதி என்று அரசல், புரசலாக செய்திகள் வந்தது.
என் பெயரை சொல்லி, அமைதியா இருந்து இந்த வேலைய பாத்துருக்கா பாரு என்று, நான் விரும்பி கல்யாணம் செய்வதை பற்றிய பேச்சுக்கள். எல்லாவற்றையும் கடந்து, May 23 , 2012 என்று திருமண நாள் குறிக்கப்பட்டது.

உப்பு ஜவுளி அன்று, என் கணவரின் குடும்பத்தை impress செய்ய , அவர்கள் select செய்த புடவையை ok சொல்லிவிட்டு, பிறகு உறவினர்கள் புடவை நல்லா இல்லை என்று கூறியதும், என்னவரை சென்னையில் இருந்து வரவைத்து, கல்யாண புடவை, reception புடவையை நானும் அவரும் சென்று மாற்றினோம்.
இதற்காக இரண்டு பெரும் சண்டை கூட போட்டு கொண்டோம். எடுத்த புடவையை மாற்றுவதில், அவர் வீட்டில் சங்கடம் வந்தது. நல்ல வேளையாக அவர்கள் வாங்கியதை விட, ஆயிரம் ருபாய் குறைந்த புடவை எனக்கு பிடித்து இருந்தது. அதனால் தப்பித்தேன்.
என் கணவரின் அக்கா ஒரு beautician , ஆனால் அவரை வேண்டாம் என்று தேடி தேடி ஒரு parlour ஐ book செய்து, Reception அன்று என் make up ஐ பார்த்தால்.
நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் வருவது போல், “ப்பா, யார் டா இந்த பொண்ணு ” என்பது போல் கொடூரமாக இருந்தது. இதில் highlight ஆக அவரின் அக்கா stage இல் என் அருகில் வந்து “Makeup ” சூப்பர் என்று வெந்த புண்ணில் வேலை பாய்ச்சினார். சரி காலையில் முகூர்த்தத்தில் பாத்துக்கலாம் என்று சமாதானம் ஆனேன்.
Stage இல் வந்த நண்பர்கள் எல்லாம், dinner சூப்பர் என்றார்கள். எல்லா ஐட்டமும் செம taste என்று உசுப்பேத்தி விட. சரி makeup தான் சொதப்பீடுச்சு , சாப்பிட்டு சமாதானம் ஆகிக்கலாம்னு பார்த்தா, “பொண்ணு மாப்பிளைக்கு எடுத்தே வெக்கல ” கடைசி பந்தியிலே இருக்கற மிச்சம் மீதி போடுவாங்களே, அந்த மாறி எங்களுக்கு கெடச்சுது.
இதும் அவுட் ஆ என்று, போட்டோ shoot எல்லாம் முடித்து , படுக்க செல்லும்போது, மணி ஒன்று. Mobile அடித்தது , எடுத்து பேசியபோது “நாளைக்கு நமக்கு கல்யாணம் ஆகபோது என்றார் ” என் உயிர் நண்பனான என் கணவர். எழுதும் போதே சிரிப்பு வருகிறது எனக்கு.

முகுர்த்த Make up இல் உஷாராகிவிட்டேன், காலையில் 6 .30 to 7 .30 முகூர்த்தம் . பொண்ணை கூப்பிட்டு வர சொல்ல, என் அத்தை வர, சாதாரணமாக எழுந்து நடந்தேன். வழியில் பார்த்த என் மாமனார், கொஞ்சம் மெதுவா நடந்து வா மா என்றார். Oh , நாம இப்போ பொண்ணு புள்ள என்று தலையில் தட்டி நடந்தேன்.
அய்யர், அனைத்து மந்திரத்தை கூறி முடித்ததும் , “கெட்டிமேளம் சொல்வதற்குள், நாதஸ்வரம் வாசிக்க ஆரம்பித்து விட்ட்டார்கள்”, நாதஸ்வரம் music ஐ கேட்டதும், அனைவரும் அஃச்சதையை தூவ , அய்யர் tension ஆயிட்டார். அதை உணர்ந்து , என் தாலி கட்டும் போட்டோவில் நான் சிரித்து இருப்பேன் . எல்லாம் சடங்குகளும் முடிந்து பார்க்கையில், என் அப்பா மண்டபத்தில் ஒரு ஓரத்தில், chair இல் கைவைத்து தூங்கி கொண்டிருந்தார். ஆம் , அவருக்கு மகளின் கல்யாணத்தை நன்றாக நடத்தி முடித்த திருப்தி.
இதோ பதிமூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன. எங்களின் காதலுக்கு கிடைத்த பரிசு எங்கள் அன்பு மகள். வாழ்க்கையில் நான் எடுத்த ஆக சிறந்த முடிவு, இப்போதும் என் நண்பனாகவே இருக்கும் என் கணவரை தேர்ந்தெடுத்ததுதான். இப்படி ஒரு வாழ்க்கையை அமைத்து கொடுத்த கடவுளுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.