IMG-20250711-WA0027

மதுரை அனுஷத்தின் அனுகிரகம் அமைப்பு சார்பில், குரு பூர்ணிமா தினத்தை முன்னிட்டு காஞ்சி மகா பெரியவர் கிருகத்தில் சிறப்புப் புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

குரு பூர்ணிமா சிறப்பு பூஜை
குரு பூர்ணிமா சிறப்பு பூஜை

ஆனி மாதம் வரக்கூடிய பௌர்ணமி மகத்துவமானதாகக் கருதப்படுகிறது. இதனை, ‘குரு பூர்ணிமா’ எனச் சாஸ்திரங்கள் சிறப்பித்துப் போற்றுகின்றன.

குரு வழிபாட்டுக்கு உகந்த நன்னாள் இது. மகத்துவமான குரு பூர்ணிமா தினத்தை ஒட்டி, மதுரை எஸ்.எஸ் காலனியில் உள்ள காஞ்சி மகா பெரியவர் கிருகத்தில், சிறப்புப் புஷ்பாஞ்சலி மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி மகா ஸ்வாமிகளின் விக்ரகத்துடன் அவர் பயன்படுத்திய பாதுகைகள் இங்கு உள்ளன.

சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையிலான வேத விற்பன்னர்கள், மகாபெரியவர் விக்ரகம் மற்றும் வெள்ளிப் பாதுகை மற்றும் இதர தெய்வங்களுக்குப் புஷ்பாஞ்சலி செய்தனர்.

மகா பெரியவர் விக்ரகம்

இந்நிகழ்வில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மதுரை அனுஷத்தின் அனுகிரகம் நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3PaAEiY

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest