unnamed-1

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

இரக்கம்

மனிதகுலத்தின் இதயத் துடிப்பு இரக்கம்.

இரக்கம் என்றால் என்ன?

இரக்கம் என்பது மற்றொரு உயிரின் வலியையும் வேதனையையும் புரிந்து கொள்வதாகும். இரக்கமுள்ள நபர்கள் வெறுமனே வருத்தப்படுவதில்லை; அவர்கள் உதவவோ, ஆறுதலளிக்கவோ அல்லது ஆதரிக்கவோ முயற்சி செய்கிறார்கள். 

ஏன் நாம் இரக்கம் காண்பிப்பதில்லை?

நம்ம வாழ்க்கையே இங்க அந்தரத்துல தொங்கிக்கிட்டு இருக்கு இதுல மத்தவங்க கிட்ட இரக்கம் வேற காட்டணுமா என்று சிலர் கேட்பதுண்டு. தானுண்டு தன் வேலையுண்டு என்று பலரும் வாழ தொடங்கிவிட்டதால் தான் இரக்க குணம் குறைந்துவிட்டது.

பரபரப்பான வாழ்க்கை முறையில் மனிதர்கள் வேகமாக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள், மற்றவர்களின் போராட்டங்களை கவனிக்க சிறிது நேரம் கூட ஒதுக்க அவர்கள் விரும்புவதில்லை.சக மனிதனின் தோல்வியையும் துன்பத்தையும் கண்டு இரக்க படுவது போல் காட்டிக்கொண்டாலும், பலர் “அப்பாடா நமக்கு இவன் இனி போட்டி இல்ல, தோத்துட்டான்” என்று மனதிற்குள் மகிழ்ச்சி அடைகின்றனர். 

நாம் சாலையில் செல்லும் போது சில விபத்துகளை காண்பதுண்டு, கீழே விழுபவர்களை தூக்கி விட்டு, அவர்களுக்கு முதலுதவி செய்து, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், வேறு யாராவது அதை செய்வார்கள் என்று கடந்து சென்று விடுகிறோம். பாவம் கீழ விழுந்துட்டாரே, நான் மட்டும் பிஸியா இல்லனா கண்டிப்பா உதவி செஞ்சிருப்பேன் என்று நம் மனதை நாம் ஏமாற்ற முயற்சிக்கிறோம். 

இயற்கை பேரிடர்களால், போர்களால் தங்கள் உறவுகளையும், உடைமைகளையும் இழந்து வறுமையிலும் பசியிலும் வாடி தவிக்கும் மக்களுக்கு என்றேனும் நாம் உதவியதுண்டா? தொலைக்காட்சியில், சமூக வலைத்தளங்களில் செய்திகள் வரும்போது வருந்துகிறோம், பின் அவரவர் வேலையை பார்க்க சென்று விடுகிறோம். இந்த இரக்கமின்மை சமூக அக்கரையில் இருந்து நம்மை தூரப்படுத்தி விட்டது. இது ஒரு நல்ல அறிகுறி அல்ல.

ஏன் இரக்க குணம் மிகவும் முக்கியம்:

இரக்கம்,  நாம் அனைவரும் மனித குடுபத்தின் ஒரு பகுதி என்பதை நமக்கு நினைவூட்டுகிறது. சக மனிதர்களிடையே இது நெருக்கத்தை உருவாக்குகிறது.

ஒரு சிறிய உதவி, ஓர் அன்பான வார்த்தை கூட ஒருவரின் கனத்த இதயத்தின் பாரத்தை குறைகிறது. பிறருக்கு உதவுவது உங்களின் மன ஆரோக்கியத்திற்கும் நல்லது.

உங்களின் இரக்க குணத்தை மற்றவர்கள் காணும்போது, அட நம்மளும் மத்தவங்க கஷ்டத்துல உதவனும் என்ற  எண்ணத்தால் அவர்கள் தூண்டப்படலாம், இது ஒரு கனிவான சமூகத்தை நிச்சயம் உருவாக்கும்.

அன்றாட வாழ்வில் இரக்கத்தை எவ்வாறு கடைப்பிடிப்பது:

சில நேரங்களில் மக்களுக்கு தீர்வுகள் தேவையில்லை, அவர்களின் வலியை பகிர்ந்து கொள்ள, அவர்களின் கவலையை கேட்க, ஆறுதலளிக்க யாரேனும் ஒருவர் இருந்தால் போதும். அதனால் மற்றவர்கள் பேசும்போது அக்கறையுடன் கேளுங்கள்.

அவன் நமக்கு என்ன பண்ணிருக்கான் நாம அவனுக்கு உதவி பண்றதுக்கு.. என்று சிலர் கூற நாம் கேட்டிருக்கலாம்.  நண்பர்களே! எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் செய்வதுதான் உதவி, எனக்கு என்ன திரும்பி கிடைக்கும் என்று எப்போதும் யோசிக்காதீர்கள். 

சிறிய செயல்களிருந்து தொடங்குங்கள், பேருந்தில் பயணம் செய்கிறீர்கள், இயலாதவர்களுக்கு அமர்வதற்கு இடம் கொடுங்கள், உங்கள் உணவை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் ( பல குடும்பங்களில் உணவை ஒரு பொருட்டாக கூட மதிப்பதில்லை, அவ்வளவு விரயம் செய்கிறார்கள்) இங்கே ஒரு வேலை உணவு கூட கிடைக்காமல் கஷ்டப்படும் மனிதர்கள் ஏராளம். 

இரக்கம் என்பது மனிதர்களிடம் மட்டுமல்ல, விலங்குகள் மட்டும் இயற்கையிடமும் காட்டுங்கள். 

தினமும் உங்கள் நாளை நீங்கள் தொடங்கும் போதே இன்று நான் யாருக்காவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தொடங்குங்கள். அன்பான, இரக்கமுள்ள ஓர் உலகத்தை உருவாக்குங்கள்.

“இரக்கமும் சகிப்புத்தன்மையும் பலவீனத்தின் அடையாளம் அல்ல, மாறாக வலிமையின் அடையாளம்.” – தலாய் லாமா

மீண்டும் அடுத்த கட்டுரையில் சந்திப்போம்.

நன்றி,

நரேந்திரன் பாலகிருஷ்ணன் 

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!

Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest