
மத்தியப் பிரதேசத்தில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம்புரண்டதால் பரபரப்பு நிலவியது.
மத்தியப் பிரதேசத்தின் அனுப்பூர் மாவட்டத்தில் சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தடம்புரண்டது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
கோவிந்தா பகுதியில் நிலக்கரி ஏற்றுவதற்காக சென்றபோது கோட்மா ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
தகவல் கிடைத்ததும் ரயில்வே குழு விரைவில் சம்பவ இடத்தை அடைந்தது. இருப்பினம், இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஹேக் செய்யப்பட்ட ஏக்நாத் ஷிண்டேவின் எக்ஸ் தளப் பக்கம்!
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டு மணி நேரத்தில் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்து குறித்து ரயில்வே நிர்வாகத்தால் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும் விசாரணையின் அடிப்படையில் மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த அதிகாரி கூறினார்.