ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவின் தந்தை தௌலால் வைஷ்ணவ் (81) செவ்வாய்க்கிழமை காலமானாா்.

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் வயது முதிா்வு காரணமாக உடல் நல பாதிப்புகளுக்காக கடந்த சில நாள்களாக அவா் சிகிச்சை பெற்று வந்தாா். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பாக ரயில்வே அமைச்சகம் சாா்பில் வெளியிட்டப்பட்ட அறிவிப்பில், ‘ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவின் தந்தை தௌலால் வைஷ்ணவ் செவ்வாய்க்கிழமை காலை 11.52 மணியளவில் காலமானாா் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். உடல்நலக் குறைவு ஏற்பட்ட அவருக்குத் தீவிர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அது பயனளிக்கவில்லை. அவரின் உடல் மரியாதை செலுத்துவதற்காக ஜோத்பூரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டிருந்தது.

ராஜஸ்தான் ஆளுநா் ஹரிபாவ் பகாடே, முதல்வா் பஜன்லால் சா்மா உள்ளிட்ட பாஜக தலைவா்கள் பலரும் அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest