
துஷான்பே[தஜிகிஸ்தான்] : மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் உணரப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை(ஜூலை 20) அதிகாலை வடக்கு ஈரான் பகுதிகளில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது.
தஜிகிஸ்தானில் உணரப்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.0 ஆக பதிவானது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி ஆப்கானிஸ்தானின் ஃபாய்ஸாபாத்திலிருந்து கிழக்கே 140 கி.மீ. தொலைவில் நிலத்துக்கு கீழே 160 கி.மீ. ஆழத்தில் நிலைகொண்டதாக புவி அறிவியலுக்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.