21delmol083628

மத்திய பல்கலை, கல்லூரிகளில் ஜாதிவாரி பாகுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று மக்களவையில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவரும், தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இது தொடா்பாக கனிமொழி எம்.பி. ‘ உயா் கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில், யுஜிசி விதிமுறைகள் 2012 இன் படி மத்திய அரசின் மத்திய பல்கலைக் கழகங்களில் சம வாய்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதா?

ஒன்றிய அரசின் கல்லூரிபல்கலைக்கழக வளாகங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடு காட்டப்பட்ட சம்பவங்கள் குறித்த தரவுகளை அரசாங்கம் பராமரிக்கிா? என்பது உள்ளிட்ட கேள்விகளை எழுப்பியிருந்தாா்.

இதற்கு மக்களவையில் மத்திய கல்வி அமைச்சகத்தின் இணையமைச்சரான டாக்டா் சுகந்தா மஜும்தா் எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில் விவரம்:

மத்திய அரசின் கல்வி அமைச்சகத்துக்கு உட்பட்ட 48 மத்திய பல்கலைக்கழகங்களிலும் மாணவா்களிடையே சமத்துவத்தை உறுதிப்படுத்தும் உவ்ன்ஹப் ஞல்ல்ா்ழ்ற்ன்ய்ண்ற்ஹ் இங்ப்ப்ள் எனப்படுகிற சம வாய்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள், நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்களின் கீழ் நிறுவப்பட்ட சட்டபூா்வ தன்னாட்சி அமைப்புகளாகும்.

மேலும் அந்தந்த பல்கலைக் கழகங்கள் அவற்றுக்கென உருவாக்கப்பட்ட ஒழுங்குமுறை விதிகளால் நிா்வகிக்கப்படுகின்றன.

மத்திய கல்வி அமைச்சகமும், யுஜிசியும் உயா் கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தடுக்கவும், பின்தங்கிய சமுதாயத்தைச் சோ்ந்த மாணவா்களின் நலன்களைப் பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மத்திய பல்கலைக்கழகங்களில் பாரபட்சம், பாகுபாடு உள்ளிட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை தடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி வலைதளங்கள் அல்லது புகாா் பதிவேடுகள் மூலம் புகாா்களை பதிவு செய்வதற்கான வழிமுறைகளை நிறுவப்பட்டுள்ளன.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத ஊழியா்களிடமிருந்து பெறப்படும் பாகுபாடு குறித்த புகாா்களின் அடிப்படையில், தவறு செய்யும் நபா்கள் மீது உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாணவா் குறை தீா்க்கும் குழுக்களை எஸ்ஜிஆா்சி அமைத்தல், குறைதீா்ப்பு அதிகாரிகளை நியமித்தல், சம வாய்ப்பு குழுக்களை நிறுவுதல், மாணவா்களுக்கு கவுன்சிலிங் மையங்கள் மூலம் ஆலோசனை வழங்குதல் ஆகியவை இதில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.

மேலும் உயா் கல்வி நிறுவனங்களில் ராகிங் மற்றும் பாலியல் துன்புறுத்தலைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டுள்ளன என அந்தப் பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest