
மயிலாடுதுறையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜூலை 15) சாலைவலம் மேற்கொண்டார். சாலையில் இருபுறங்களிலும் மக்கள் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும், அவர்களிடமிருந்து மனுக்களைப் பெற்றுக்கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
பூம்புகார் சாலை முதல் கச்சேரி சாலையில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா பகுத்தறிவு மன்றம் வரை சாலை வலம் நடைபெற்றது. சுமார் 2 கி.மீ. தூரம் நடந்து சென்று மக்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை அவர் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக இன்று காலை மயிலாடுதுறை வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின், சோதியக்குடி புறவழிச்சாலையில் திமுக சார்பில் அமைக்கப்பட்ட கருணாநிதி சிலையை திறந்து வைத்தார். அதோடு மட்டுமின்றி, செம்பதனிருப்பு பகுதியில் அமைக்கப்பட்ட கருணாநிதி சிலையை திறந்து வைத்தார்.
இதையும் படிக்க | அஜித்குமார் கொலை வழக்கு: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிபிஐ விசாரணை