
புது தில்லி: தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் – புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று புது தில்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், ரூ.2,157 கோடி செலவில் 4 வழி நெடுஞ்சாலை அமைக்க மத்திய நெடுஞ்சாலைத் துறை அளித்திருந்த பரிந்துரைக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், புதிய வருமான வரி சட்டத் திருத்த மசோதாவை மாற்றங்களுடன் மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.