Capture-1

மறுவெளியீடான பாட்ஷா திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாட்ஷா திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இன்றும் படத்தில் இடம்பெற்ற தேவாவின் பின்னணி இசை மற்றும் அனைத்து பாடல்களும் ரசிக்கப்படுகின்றன. இந்தப் படத்தில் ரகுவரன், நக்மா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றியை அடைந்ததுடன் ரஜினியின் சிறந்த படங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பாட்ஷா திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை மறுவெளியீடானது.

முதல்முறை வெளியீடான போது இப்படத்தைக் கொண்டாடிய பல ரசிகர்கள் குடும்பத்துடன் பேரன், பேத்திகளுடன் வந்து திரைப்படத்தை மீண்டும் பார்த்து தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து வருகின்றனர்.

இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கவர்ந்ததால் பல திரையரங்குகளில் இப்படம் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருப்பதால் மறுவெளியீட்டிலும் நல்ல வசூலைப் பெறும் என்றே தெரிகிறது.

இதையும் படிக்க: எல்ஐகே – எஸ்ஜே சூர்யா போஸ்டர்!

actor rajinikanth baashha movie rerelease victory

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest