karna

மறைந்த நடிகர் விஷ்ணுவரதன் மற்றும் நடிகை சரோஜா தேவி ஆகியோருக்கு, கர்நாடக ரத்னா விருது வழங்க அம்மாநில அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புகழ்பெற்ற கன்னட திரைப்பட நடிகர் விஷ்ணுவரதன் கடந்த 2009 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இதையடுத்து, கன்னடம், மலையாளம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் திரைப்படங்களில் நடித்துள்ள பழம்பெரும் நடிகை சரோஜா தேவி கடந்த ஜூலை மாதம் காலமானார்.

இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருதை வழங்க, அம்மாநில அமைச்சரவை இன்று (செப்.11) முடிவு செய்துள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்துடன், மறைந்த புகழ்பெற்ற கன்னட கவிஞர் குவெம்பு-க்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்கக் கோரி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக, கர்நாடக சட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஹெச்.கே. பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: வாகன விற்பனை நிலையங்களில் பிரதமர் மோடி படம்? காங்கிரஸ் விமர்சனம்!

The state cabinet has decided to confer the Karnataka Ratna award on the late actor Vishnuvarathan and actress Saroja Devi.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest