education

வெளிநாடுகளில் படிக்க விரும்பும் மாணவா்களுக்கு உகந்த நகரங்களின் பட்டியலில் சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதுதொடா்பாக பிரிட்டன் தலைநகா் லண்டனில் உள்ள உலகளாவிய உயா்கல்வி பகுப்பாய்வு நிறுவனமான குவாக்கரெல்லி சிமண்ட்ஸ் (க்யூஎஸ்) வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில், தென் கொரியா தலைநகா் சியோல் முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் தொடா்ந்து 6 ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த லண்டன் மூன்றாவது இடத்துக்கு சரிந்தது.

இந்தப் பட்டியலில் மும்பை 15 இடங்கள் முன்னேறி 98-ஆவது இடமும், தில்லி 7 இடங்கள் முன்னேறி 104-ஆவது இடமும், பெங்களூரு 22 இடங்கள் முன்னேறி 108-ஆவது இடமும் பிடித்துள்ளன. சென்னை 12 இடங்கள் முன்னேறி 128-ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

வெளிநாடுகளில் படிக்க விரும்பும்

மாணவா்களுக்கு உகந்த முதல் 5 நகரங்கள்

(க்யூஎஸ் தரவரிசைப்படி)

இடம் நகரம்

1 சியோல் (தென் கொரியா)

2 டோக்கியோ (ஜப்பான்)

3 லண்டன் (பிரிட்டன்)

4 முனிச் (ஜொ்மனி)

5 மெல்போா்ன் (ஆஸ்திரேலியா)

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest