
மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையேயான மெட்ரோ ரயில் சேவை வரும் 2027 மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டமானது தற்போது 2 வழித் தடங்களில் செயல்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்டமாக 118.9 கி.மீ. தூரத்துக்கு மேலும் 3 வழித்தடங்களில் (3, 4, 5 வழித்தடங்கள்) ரயில் பாதை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதில், 5-ஆவது வழித்தடமானது மாதவரம் பால் பண்ணையில் தொடங்கி கோயம்பேடு, போரூர், ஆலந்தூா் வழியாக சோழிங்கநல்லூர் வரை 47 கிமீ தூரத்திற்கு 5 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள், 39 உயர்நிலை ரயில் நிலையங்களுடன் அமைக்கப்படுகிறது.
இந்த நிலையில், மாதவரம் – சோழிங்கநல்லூர் இடையே இடையேயான 6 பெட்டிகள் கொண்ட மெட்ரோ ரயில் சேவை வரும் 2027 மார்ச் மாதத்தில் தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், பூவிருந்தவல்லி – போரூர் இடையே 6 பெட்டிகள் கொண்ட ஆளில்லா முதல் மெட்ரோ ரயில் வரும் டிசம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என்றும், ஜூன் 2026-ல் போரூர்- கோடம்பாக்கம் மற்றும் கோயம்பேடு – நந்தம்பாக்கம் இடையேயான ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ மெட்ரோ ரயில் பாதையின் இரண்டாம் கட்டப்பணிகள் இறுதி நிலையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: குலசை தசரா திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!