
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது 100-ஆவது டெஸ்ட் போட்டியை விளையாடவிருக்கிறார்.
35 வயதாகும் இடது கை வேகப் பந்துவீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 395 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
டெஸ்ட்டில் 5 விக்கெட்டுகளை 15 முறையும் 10 விக்கெட்டுகளை 2 முறையும் எடுத்துள்ளார்.
பேட்டிங்கில் டெஸ்ட்டில் 2,311 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 11 அரைசதங்கள் அடங்கும். கடைசியாக அவர் அடித்த அரைசதம் ஆஸி. அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
99 போட்டிகளிலும் 145 கி.மீ./மணி வேகம்…
மிட்செல் ஸ்டார்க் குறித்து ஆஸி. அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் கூறியதாவது:
மிட்செல் ஸ்டார்க் இந்த வயதிலும் 145 கி.மீ./மணி வேகத்தில் பந்து வீசுகிறார். என்னால் 100 போட்டிகளிலும் இதே வேகத்தில் பந்துவீச முடியாது.
மிட்செல் ஸ்டார் ஒரு போர் வீரன். ஓவ்வொரு வாரமும் திரும்ப வருகிறார். என்ன நடந்தாலும் விளையாடுகிறார். இதையெல்லாம் கஷ்டமே படாமல் எளிதாகச் செய்யும் மனிதராக இருக்கிறார் என்றார்.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் மிட்செல்ஸ் ஸ்டார்க் தனது 100-ஆவது போட்டியில் களமிறங்குகிறார். இந்தப் போட்டி வரும் ஜூலை 12ஆம் தேதி தொடங்குகிறது.