Dr-Hema-Sane

மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்தவர் பேராசிரியர் ஹேமா சென் (85). இவர் 1962 முதல் 2000-ம் ஆண்டு ஓய்வு பெறும் வரை புனேவில் உள்ள அபாசாஹேப் கார்வாரே கல்லூரியில் தாவரவியல் பாடம் நடத்தி வந்தார்.

‘தாவரங்களின் கலைக்களஞ்சியம்’ என்று புகழப்பட்ட ஹேமா சேன் நேற்று காலமானார். இவரின் மரணத்தைத் தொடர்ந்து இவர் தொடர்பான செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

சில வருடங்களுக்கு முன்பு மின்சாரத்தைத் தவிர்த்து சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை மேற்கொண்டார் என்பதற்காக ஊடகங்களில் கவனம் பெற்றவர் ஹேமா சென்.

ஹேமா சென்
ஹேமா சென்

புனேவின் புத்வார் பெத் கிராமத்தில், மின்சாரம் இல்லாத வீட்டில் தனது வாழ்நாள் முழுவதும் வசித்து வந்தார். அதற்கான காரணம் குறித்து பேசியபோதுகூட, இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் மீதான அவரது அன்பு வெளிப்பட்டது.

அவர் தனியார் செய்திக்கு அளித்த பேட்டி ஒன்றில், “உணவு, தங்குமிடம், உடைகள் நம் அடிப்படைத் தேவைகள். ஒரு காலத்தில், மின்சாரம் என்பதே இல்லை.

சுதர்ந்திரத்துக்குப் பின்னர் நீண்டகாலத்துக்குப் பிறகுதான் வந்தது. அதனால் அது இல்லாமல் என்னால் சமாளிக்க முடியும். என் வாழ்நாள் முழுவதும் மின்சாரம் அத்தியாவசியம் என எனக்குத் தோன்றியதே இல்லை.

மின்சாரம் இல்லாமல் நான் எப்படி வாழ்கிறேன் என்று மக்கள் அடிக்கடி என்னிடம் கேட்கிறார்கள், அவர்கள் எப்படி மின்சாரத்துடன் வாழ்கிறார்கள் என்று நான் அவர்களிடம் கேட்கிறேன்?

என் மரணத்துக்குப் பிறகு என்னுடைய சொத்து என என் நாய், இரண்டு பூனைகள், ஒரு கீரிப்பிள்ளை, பல பறவைகள்தான் இருக்கும். இதை என் சொத்து எனக் கூறமுடியாதுதான்.

ஹேமா சென் வாழ்ந்த வீடு
ஹேமா சென் வாழ்ந்த வீடு

ஆனால் அவற்றைப் பராமரிக்க மட்டுமே நான் இருக்கிறேன். என்னை சிலர் மனநலம் பாதிக்கப்பட்டவள் என்றுக்கூட சொல்லியிருக்கிறார்கள்.

நான் யாருக்கும் எந்த செய்தியையும் பாடத்தையும் கொடுக்கவில்லை, மாறாக, வாழ்க்கையில் உங்கள் சொந்த பாதையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று கூறும் பகவான் புத்தரின் பிரபலமான மேற்கோளை நான் எதிரொலிக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். தற்போது அவரின் மரணம் குறித்த செய்தியுடன் அவர் கூறிய கருத்துகளும் வைரலாகியிருக்கிறது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest