
விழுப்புரத்தில் கரும்பு வெட்டச் சென்ற சகோதரர்கள் இருவர் மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த கொங்கராயனூர் கிராமத்தைச் சேர்ந்த குப்பன் என்பவரின் மகன்கள் ராமசந்திரன் (33) மற்றும் சின்னராசு (30) ஆகிய இருவரும் சேர்ந்து, பெரும்புகை கிராமத்தில் உள்ள ரவி என்பவரின் நிலத்தில் கரும்பு வெட்டச் சென்றுள்ளனர்.
இந்த நிலையில், கரும்பு வெட்டச் சென்ற இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில், அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், இருவரின் உடல்களைக் கைப்பற்றி செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணையும் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிக்க: நாகை: நாளை விஜய் பரப்புரையில் இடம் மாற்றம்!