sensex

மும்பை: முதலீட்டாளர்கள் ஆட்டோ மற்றும் பார்மா பங்குகள் தொடர்ந்து வாங்கியதால் இன்றைய வர்த்தகத்தில் பங்குச் சந்தைகள் நான்கு நாள் தொடர் சரிவை முறியடித்து, உயர்ந்தது முடிவடைந்தன. மேலும் சில்லறை பணவீக்கம் ஆறு ஆண்டுகளுக்கும் இல்லாத அளவிற்கும் குறைந்துள்ளது.

30 பங்குகளைக் கொண்ட பிஎஸ்இ சென்செக்ஸ் இன்றைய காலை நேர வர்த்தகத்தில் 490.16 புள்ளிகள் உயர்ந்து 82,743.62 ஆக இருந்தது. வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 317.45 புள்ளிகள் உயர்ந்து 82,570.91 ஆகவும் 50 பங்குகளைக் கொண்ட நிஃப்டி 113.50 புள்ளிகள் உயர்ந்து 25,195.80 ஆக நிலைபெற்றது.

கடந்த நான்கு வர்த்தக நாட்களில், சென்செக்ஸ் 1,459.05 புள்ளிகள் சரிந்த நிலையில் நிஃப்டி 440 புள்ளிகள் சரிந்ததுள்ளது.

சென்செக்ஸில் சன் பார்மா, டிரென்ட், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை பங்குகள் உயர்ந்து முடிந்த நிலையில் எடர்னல், டாடா ஸ்டீல், கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி பங்குகள் சரிந்து முடிந்தன.

நிஃப்டி-யில் ஹீரோ மோட்டோகார்ப், சன் பார்மா, பஜாஜ் ஆட்டோ, அப்பல்லோ மருத்துவமனைகள், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் ஆகிய பங்குகள் உயந்த நிலையில் எச்.சி.எல் டெக்னாலஜிஸ், எச்.டி.எஃப்.சி லைஃப், எஸ்.பி.ஐ லைஃப் இன்சூரன்ஸ், எடர்னல் மற்றும் டாடா ஸ்டீல் ஆகியவை சரிந்து முடிவடைந்தன.

ஐடி சேவைகள் நிறுவனமான எச்.சி.எல் டெக் ஜூன் வரையான காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 9.7 சதவிகிதம் சரிவைப் பதிவு செய்ததையடுத்து 3.31 சதவிகிதம் சரிந்தது முடிந்தன. அதிகப்படியான செலவு மற்றும் வாடிக்கையாளர் திவால் ஆன நிலையின் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக நிறுவனம் தெரிவித்தது.

அனைத்து துறை குறியீடுகளும் உயரந்து முடிந்தன. மருந்து, ஆட்டோ, மீடியா, பொதுத்துறை வங்கி, நுகர்வோர் சாதனங்கள், ரியல் எஸ்டேட் ஆகியவை 0.5 முதல் 1 சதவிகிதம் வரை உயர்ந்தன.

பிஎஸ்இ மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகள் தலா 1 சதவீதம் உயர்ந்து, தொடர்ந்து இரண்டாவது நாளான இன்றும் லாபத்தை நீட்டித்தது.

உலகளாவிய விரிவாக்கத் திட்டத்தை தொடர்ந்து ஹீரோ மோட்டோகார்ப் பங்குகள் 5 சதவிகிதம் உயர்ந்தன.

நம்பிக்கையூட்டும் வழிகாட்டுதலின் அடிப்படையில், முதல் காலாண்டில் லாபம் கிட்டத்தட்ட இரட்டிப்பாகியதால், ராலிஸ் இந்தியா பங்குகள் 52 வார உச்சத்தை எட்டியது.

முதல் காலாண்டில் ஏற்பட்ட இழப்புகளால் தேஜஸ் நெட்வொர்க்ஸ் 6 சதவிகிதம் சரிவுடன் முடிவு.

‘லெக்செல்வி’ வெளியீட்டிற்கான அமெரிக்க காப்புரிமை தீர்வை சரி செய்ததால் சன் பார்மா பங்குகள் கிட்டத்தட்ட 3 சதவிகிதம் உயர்ந்தன.

பவர் மெக் ப்ராஜெக்ட்ஸ் பங்குகள் ரூ.551 கோடி மதிப்புள்ள ஆர்டர்கள் பெற்றதையடுத்து அதன் பங்குகள் உயர்ந்த நிலையில் கிழக்கு மத்திய ரயில்வேயிடம் ஆர்டர்கள் பெற்றதையடுத்து ரயில்டெல் கார்ப்பரேஷன் பங்குகள் 2 சதவிகிதம் வரை உயர்ந்தன.

ஜூன் காலாண்டில் நிகர லாபம் 5% அதிகரித்ததால் டாடா டெக்னாலஜிஸ் பங்குகள் 2 சதவிகிதம் உயர்ந்தன. எதிர்பார்த்ததை விட பலவீனமான இருந்தததால் முதல் காலாண்டில் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் பங்குகள் 3 சதவிகிதம் வரை சரிந்தன.

ஆதம் இன்வெஸ்ட்மென்ட், நிப்பான் லைஃப், எச்டிஎஃப்சி ஏஎம்சி, காட்ஃப்ரே பிலிப்ஸ், ஜில்லெட் இந்தியா, யுடிஐ ஏஎம்சி, பிரமல் எண்டர்பிரைசஸ், அனுபம் ரசாயன், லாரஸ் லேப்ஸ், இஐடி பாரி, குளோபல் ஹெல்த், சீயட், ஜேஎம் ஃபைனான்சியல் உள்ளிட்ட 140 பங்குகளும் பிஎஸ்இ-யில் 52 வார உச்சத்தை எட்டியது.

ஜூன் மாதத்தில் சில்லறை பணவீக்கம் ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 2.1 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. பரவலாக பெய்து வரும் பருவமழை காரணமாக காய்கறிகள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் குறைந்ததே இதற்கு காரணம் என்று தெரிவிக்கப்பட்டது.

நுகர்வோர் விலைக் குறியீட்டு அடிப்படையிலான பணவீக்கம் மே மாதத்தில் 2.82 சதவிகிதமாகவும், ஜூன் 2024ல் 5.08 சதவிகிதமாகவும் இருந்தது. நவம்பர் 2024 முதல் பணவீக்கம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

ஆசிய சந்தைகளில் தென் கொரியா கோஸ்பி, ஜப்பான் நிக்கி 225 குறியீடு மற்றும் ஹாங்காங் ஹாங் செங் ஆகியவை உயரந்த நிலையில், ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு சரிவுடன் முடிந்தது.

ஐரோப்பிய சந்தைகள் உயர்ந்து வர்த்தகமான நிலையில் அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) உயர்ந்து முடிந்தன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 0.17 சதவிகிதம் குறைந்து பீப்பாய்க்கு ஒன்றுக்கு 69.09 அமெரிக்க டாலராக உள்ளது.

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) அன்று ரூ.1,614.32 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்தனர். அதே நேரத்தில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,787.68 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest