
நடிகர் விக்னேஷ் ரவி நடித்த கட்டுமரக்காரன் பாடல் கவனம் பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அதிக வெற்றிப் படங்களைக் கொடுத்த வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.
தற்போது, திரைப்படத் தயாரிப்பைத் தாண்டி ஆல்பம் பாடல்களிலும் கவனம் செலுத்த ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
அதன் முதல் பாடலாக நடிகர் கேகேவின் கனவே மற்றும் அசோக் செல்வன் – மிர்னா நடித்த ’18 மைல்ஸ்’ ஆகிய பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.
இந்த நிலையில், மீனவர்களின் வலிகளைப் பேசும் கட்டுமரக்காரன் என்கிற புதிய பாடலை வெளியிட்டுள்ளனர். இதில், நடிகர் விக்னேஷ் ரவி முன்னணியாக நடிக்க, விபின் பாஸ்கர் இசையமைப்பில் பாடகர் அறிவு பாடியுள்ளார்.
தன சேகர் நாராயணன் இயக்கத்தில் உருவான இப்பாடல் யூடுயூபில் 10 லட்சம் பார்வைகளையும் கடந்துள்ளது.