PTI09172024000441B

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தி.மு.க. மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், இன்று(செப். 23) காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் தொடங்கியது.

இதில் திமுகவைச் சேர்ந்த எம்.பி.க்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத்தொடரில், அவை அலுவல்களில் பல்வேறு விவகாரங்களை எழுப்புவது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.

மேலும், மத்திய அரசிடமிருந்து பெறப்பட வேண்டிய நிதிகள் குறித்தும், வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

எதிர்வரும் பேரவைத் தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சூழலில், திமுகவின் நிலைப்பாடு குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: மாதவரம் – சோழிங்கநல்லூர் மெட்ரோ ரயில் சேவை எப்போது?

The DMK MPs meeting, led by the Chief Minister, has begun and is underway.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest