
“முதலை கண்ணீர் வடிக்காதே” என்று பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். முதலைகள் உணவு உண்ணும் போது கண்ணீர் வடிக்கின்றன,
ஆனால் அது உணர்ச்சிகரமான காரணங்களால் இல்லாமல் அறிவியல் காரணங்களுக்காக கண்ணீர் வெளிப்படுகிறது. முதலைக் கண்ணீர் வடிப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

முதலைகள் தங்களின் இரையை உண்ணும் போது உண்மையாகவே கண்ணீரை வடிக்கின்றன.
இது மனவேதனையாலோ, துக்கத்தினாலோ அல்லது உணர்ச்சி ரீதியான எந்த காரணத்தினாலும் ஏற்படுவதில்லை மாறாக இது ஓர் உடலியல் செயலால் ஏற்படுகிறது.
முதலை தன் இரையை கடிக்கும் போது அதன் தாடை மற்றும் தொண்டையில் ஏற்படும் இயக்கங்கள், அதன் முகத்தின் எலும்புகளுக்குள் இருக்கும் வெற்றிடத்தில் காற்று அழுத்தப்படுகிறது. இந்த அழுத்தம் முதலையின் கண்ணீர் சுரப்புகளைத் தூண்டுகிறது.
இதனால்தான் முதலைகளுக்கு கண்ணீர் தன்னிச்சையாகவே வெளியாகிறது. இது உணர்ச்சி ரீதியான வெளிப்பாடு அல்லாமல் உடலியல் ரீதியான விளைவுகளாக உள்ளன.
முதலைகளின் கண்ணீர் உண்மையான உணர்ச்சிகளுடன் எந்த தொடர்பும் இல்லாததால் அதனை பலரும் பொய்யான சோகத்துடன் தொடர்பு படுத்துகின்றனர்.