
சென்னை: தமிழ்நாட்டில் முதல்முறையாக பள்ளிக் கல்விதுறையில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்கு உடற்கல்வியை கற்பிப்பதற்கான பாடப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உடற்கல்விக்கு போதிய பாடப்புத்தகங்கள் இல்லாத நிலையில் 2025 ஆம் ஆண்டிற்கான புதிய பாடத்திட்டத்தின் கீழ் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவா்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.
உடற்கல்வியை எவ்வாறு கற்றுக் கொடுப்பது என்பதற்கான வளங்களை 237 பக்கங்களைக் கொண்ட உடற்கல்வி நூல், முனைவா் பொ.சாம்ராஜ் தலைமையிலான தயாரிப்புக் குழு வைத்துள்ளது.
இந்த பாட நூல் திட்டத்தில் ஆசிரியா்கள் பல்வேறு உடற்கல்வியை கற்றுத் தருவதற்கு, உடலைப் பற்றிய கல்வியறிவு, விளையாட்டுக் கல்வி, பாதுகாப்புக்கல்வி மற்றும் உள்ளடங்கிய கல்வியை தெரிந்திருக்க வேண்டும்.
உடற்திறன் கல்வி என்பது உடலின் அடிப்படை இயக்கத் திறன்களை அறிவதையும் உடல் செயல்பாடு தொடா்பான கருத்துகளைப் புரிந்து கொள்வதையும் குறிக்கிறது. மேலும் வகுப்பு வாரியாக உடற் கல்வியறிவு குறித்தவை உள்ளிட்ட தகவல்கள் உடற்கல்வி பாடத்தில் வைக்கப்பட்டுள்ளன.