
முதல்வர் ஸ்டாலின் கடந்த 21-ம் தேதி காலையில் வழக்கமான நடை பயிற்சி மேற்கொண்ட போது, அவருக்கு லேசான தலை சுற்றல் ஏற்பட்டது. இதையடுத்து. சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட் டன. கூடுதல் பரிசோதனைக்காக தேனாம்பேட்டை அப்போலோ மருத்துவமனைக்கும் சென்று திரும்பினார். 3 நாட்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதால், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், இன்று கவிஞர் வைரமுத்து முதல்வர் ஸ்டாலினை சந்தித்தாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசிய அவர், “முதல்வர் ஸ்டாலினின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மிக விரைவில் அல்லது இன்றே முதல்வர் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு திரும்புவதற்கான வாய்ப்பிருக்கிறது என எனக்குச் சொல்லப்பட்டது. இன்னும் சில நாள்களில் வழக்கம்போல எல்லாப் பணிகளையும் ஆற்றுவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. மருத்துவத்தின் மீதும், அதைச் சரியாகப் பின்பற்றுகிற முதல்வரின் மருத்துவ அறிவின் மீதும் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. ” என்றார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…