mks-trisha

சென்னையில் வசித்து வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை மற்றும் நடிகை திரிஷா வீட்டில் வெடிகுண்டுகள் வைத்திருப்பதாக மின்னஞ்சல் மூலமாக குறுஞ்செய்தி விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சமீப காலமாக முக்கிய பிரமுகர்கள், பிரபலங்கள் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் வருவது வாடிக்கையாகி வருகிறது.

இந்நிலையில், சென்னையில் வசித்து வரும் தமிநாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் வீடு, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது

மேலும், திரைப்பட நடிகை திரிஷா வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்களும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட இடங்களுக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வெடிகுண்டு சோதனையில் மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

முதல்வர் ஸ்டாலின் வீடு, ஆளுநர் மாளிகையில் மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் காவல் துறையினர்.

சென்னை கோட்டையில் உள்ள கடற்படை உணவகம், புரசைவாக்கம் பிஎஸ்என்எல் அலுவலகம், தேனாம்பேட்டை தலைமை கணக்கு கட்டுப்பாட்டாளா் அலுவலகம், சென்னை விமான நிலையம், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகம், மத்திய அரசின் வருவாய் துறை அலுவலகங்கள், அமலாக்கத்துறை அலுவலகங்கள் என பொதுமக்கள் அதிகமாக வந்துபோகக்கூடிய இடங்களிலும், தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகங்கள், பிரபலங்கள், திரைப்பட நடிகர்கள் மற்றும் நடிகைகள் இல்லங்கள் என தொடர்ச்சியாக வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலம் வந்து கொண்டே இருக்கிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை சென்னை மத்திய சைபர் குற்றப்பிரிவு போலீஸார் தனிக்குழு அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் வெளிநாடுகளில் இருந்து வெடிகுண்டு மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலமாக வருவதாக தகவல் வெளியானது .

இதையடுத்து தீவிர கண்காணிப்பு செய்து ஆய்வுகள் மேற்கொண்ட பிறகு வெடிகுண்டு மிரட்டல் செய்திகள் அனைத்தும் வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் மின்னஞ்சல் வந்திருப்பதாக போலீசார் வட்டாரம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள்.

Bomb threats to Chief Minister Stalin’s house, Governor’s House, and actress Trisha’s house

தீபாவளி: சென்னையிலிருந்து 108 சிறப்பு ரயில்கள் – கூடுதல் பொது மேலாளா் பி. மகேஷ் தகவல்

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest