rUAL8EQN

முத்தரப்பு டி20 தொடரிலிருந்து காயம் காரணமாக நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் விலகியுள்ளார்.

நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் தங்களுக்குள் முத்தரப்பு டி20 தொடரில் விளையாடவுள்ளன. ஜிம்பாப்வேவில் நடைபெறும் இந்த தொடர் வருகிற ஜூலை 14 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. தொடரின் முதல் போட்டியில் ஜிம்பாப்வே மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதுகின்றன.

ஃபின் ஆலன் விலகல்

விரைவில் முத்தரப்பு டி20 தொடர் தொடங்கவுள்ள நிலையில், காயம் காரணமாக முத்தரப்பு டி20 தொடரிலிருந்து நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஃபின் ஆலன் விலகியுள்ளது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சான் பிரான்சிஸ்கோ யுனிகார்ன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஃபின் ஆலனுக்கு போட்டியின்போது, பாதத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக அவர் தாயகம் திரும்பினார்.

காயம் காரணமாக தாயகம் திரும்பியுள்ள ஃபின் ஆலன், ஜிம்பாப்வேவில் நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரிலிருந்து விலகியுள்ளார். அவரது காயத்தின் தன்மை குறித்து பரிசோதனை மேற்கொண்ட பிறகு, மீண்டும் அணியுடன் எப்போது இணைவார் என்பது தெரியவரும்.

முத்தரப்பு டி20 தொடரில் அவருக்குப் பதிலாக விரைவில் நியூசிலாந்து அணி மாற்று வீரரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முத்தரப்பு டி20 தொடரில் வருகிற ஜூலை 16 ஆம் தேதி நியூசிலாந்து அணி அதன் முதல் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.

New Zealand opener Finn Allen has been ruled out of the T20 tri-series due to injury.

இதையும் படிக்க: பயத்தின் காரணமாக வியான் முல்டர் 400 ரன்கள் குவிக்க முயற்சிக்கவில்லை: கிறிஸ் கெயில்

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest