
முத்தரப்பு டி20 தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது.
ஜிம்பாப்வேவில் நடைபெற்று வரும் முத்தரப்பு டி20 தொடரில் இன்றையப் போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் விளையாடி வருகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, தென்னாப்பிரிக்க அணி முதலில் விளையாடியது.
தென்னாப்பிரிக்கா – 134/8
முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 134 ரன்கள் எடுத்தது.
அந்த அணியில் அதிகபட்சமாக ரீஸா ஹென்ரிக்ஸ் 37 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். அதில் 4 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஜியார்ஜ் லிண்டே 23 ரன்களும், வாண்டர் துசென் 14 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை.
நியூசிலாந்து தரப்பில் ஜேக்கோப் டஃபி, ஆடம் மில்னே மற்றும் மிட்செல் சாண்ட்னர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். வில்லியம் ஓ’ரூர்க் ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினார்.
135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
இதையும் படிக்க: முழுமையாக விளையாடுங்கள் அல்லது ஓய்வெடுங்கள்; பும்ராவுக்கு முன்னாள் ஆல்ரவுண்டர் அறிவுரை!
Batting first against New Zealand in the tri-nation T20 series, South Africa scored 134 runs for the loss of 8 wickets.