aamirkhan11753678498

பாலிவுட் நடிகர் ஆமீர் கான் சமீபத்தில் நடித்து வெளியான சிதாரே ஜமீன் பர் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை ஒ.டி.டி தளத்தில் வெளியிட ரூ.120 கோடி கொடுப்பதாக ஒ.டி.டி தளங்கள் கூறியபோதிலும் தியேட்டரில்தான் வெளியிடுவேன் என்று கூறி தியேட்டரில் படத்தை அமீர்கான் வெளியிட்டார். இதில் படம் இந்தியாவில் மட்டும் ரூ.165 கோடிக்கு வசூல் கொடுத்தது. இதனால் ஆமீர் கான் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார். படம் ரூ.90 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. இனி ஒ.டி.டி.தளத்தில் வெளியிட உரிமை வழங்குவதன் மூலம் அதிலும் கணிசமான ஒரு தொகை ஆமீர் கானுக்கு கிடைக்கும்.

இந்நிலையில் ஆமீர்கான் இல்லத்திற்கு போலீஸ் அதிகாரிகள் படையெடுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மும்பை பாந்த்ராவில் உள்ள ஆமீர் கான் இல்லத்திற்கு வெளியில் போலீஸ் அதிகாரிகள் கார்கள் வரிசையாக நின்றதை பார்க்க முடிந்தது. ஆமீர் கானை பார்க்க வந்த அனைத்து போலீஸ் அதிகாரிகளும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆவர். அவர்கள் வந்து சென்றதை ஆமீர் கானோ அல்லது அவரது தரப்பிலோ உறுதிபடுத்தவில்லை.

திடீரென என்ன காரணத்திற்காக ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆமீர் கான் இல்லத்திற்கு படையெடுத்தனர் என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முதல் கட்டமாக 25 ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆமீர் கான் இல்லத்திற்கு சென்று வந்ததாக தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து ஆமீர் கானுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது எங்களுக்கும் என்ன காரணத்திற்காக ஐ.பி.எஸ் அதிகாரிகள் வந்து சென்றார்கள் என்பது தெரியவில்லை. நாங்களும் அது பற்றி விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தனர்.

ஆமீர் கான் ஆகஸ்ட் 14 முதல் 24ம் தேதி வரை ஆஸ்ரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடக்கும் இந்திய திரைப்படவிழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். இதில் இந்திய சினிமாவிற்கு ஆமீர் கான் ஆற்றிய சேவைக்காக கவுரவிக்கப்பட இருக்கிறார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest