
சென்னையிலுள்ள மெட்ராஸ் ஐஐடி-இன் கணிதத் துறையில் கீழ்வரும் பணிக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: ICSR/PR/Advt/121/2025
பணி: Junior Research Fellow
காலியிடம்: 1
சம்பளம்: மாதம் ரூ. 5.37,000 + எச்ஆர்ஏ
தகுதி : Mathematics, Applied Mathematics பிரிவில் எம்.எஸ்சி முடித்து சிஎஸ்ஐஆர்-யுஜிசி நெட் தேர்வு அல்லது என்டிஏ -யுஜிசி நெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: மத்திய அரசால் நடத்தப்படும் யுஜிசி நெட் தகுதித் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஒரு ஆண்டு ஜேஆர்எஃப் பணி வழங்கப்படும். நேர்முகத்தேர்வு குறித்த விபரம் தகுதியானவர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். நேர்முகத்தேர்வுக்கு வரும் போது விண்ணப்பப்படிவ நகல் மற்றும் தேவையான அசல் சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.icandsr.iitm.ac.in/careers என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 30.7.2025