
ராஜா ரகுவன்ஷி கொலை வழக்கில் 2 பேருக்கு உள்ளூர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
விசாரணைகளுக்கு முழுமையாக ஒத்துழைத்ததால், தோமர் மற்றும் பல்பீருக்கு உள்ளூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஜாமீன் வழங்கியது.
அவர்கள் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றங்கள் சுமத்தப்பட்டதாக அவர்கள் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
மேகாலயாவில் இருந்து தப்பி ஓடிய பிறகு சோனம் தங்கியிருந்த இந்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் உரிமையாளர் தோமர் ஆவார். மேலும் பல்பீர் அந்த குடியிருப்பின் பாதுகாவலராக இருந்தார்.
இவர்கள் மீது நீதித் துறைக்கு இடையூறு விளைவித்தல் மற்றும் ஆதாரங்களை சேதப்படுத்துதல் ஆகிய குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்தூரைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி கடந்த மே 23ஆம் தேதி மேகாலயாவுக்கு மனைவி சோனமுடன் தேனிலவு சென்றபோது காணாமல் போனார்.
ஜூன் 2 ஆம் தேதி கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தின் சோஹ்ரா பகுதியில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் இருந்து அவரது சிதைந்த உடல் கண்டெடுக்கப்பட்டது.
தலைவன் தலைவி கொண்டாடக்கூடிய படமாக இருக்கும்: விஜய் சேதுபதி
மே 11 ஆம் தேதி சோனமை, ராஜா மணந்தார்.
ராஜா ரகுவன்ஷியைக் கொலை செய்ய ஆகாஷ் ராஜ்புத், விஷால் சிங் சௌஹான் மற்றும் ஆனந்த் குர்மி ஆகியோரை பயன்படுத்தியதாகக் சோனம் மற்றும் ராஜ் குஷ்வாஹா மீது குற்றம் சாட்டப்பட்டது.
சோனம், ராஜ் குஷ்வாஹா மற்றும் கைது செய்யப்பட்ட மூன்று கொலையாளிகளும் தற்போது நீதிமன்றக் காவலில் உள்ளனர்.