Kangana-Ranaut

மேக வெடிப்பால் பாதிக்கப்பட்ட மண்டி தொகுதியில் நடிகையும் எம்பியுமான கங்கனா ரணாவத் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஹிமாசலப் பிரதேச, மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன்காரணமாக கனமழை, திடீர் வெள்ளம், தொடர் நிலச்சரிவுகளால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேக வெடிப்பால் பவாரா, துனக், பைட்ஷாத், கன்டா மற்றும் முராத் உள்ளிட்ட பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த பஞ்சாயத்துகள் அனைத்திலும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சாலைகள், நீர் மற்றும் மின் திட்டங்கள் கணிசமான சேதங்களை சந்தித்துள்ளன.

மண்டி மாவட்டத்தில் மேக வெடிப்புகள், திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் என பத்து சம்பவங்களில் இதுவரை 14 பேர் பலியாகினர். அதே நேரத்தில் காணாமல் போன 31 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில மேக வெடிப்பு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட மண்டி மாவட்டத்தில் உள்ள துனக் பகுதியில் பாலிவுட் நடிகையும் மண்டி தொகுதி எம்பியுமான கங்கனா ரணாவத் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.

உடன் முன்னாள் முதல்வர் ஜெய்ராம் தாகுர் இருந்தார். அப்போது அவர் ஏஎன்ஐ செய்திக்கு அளித்த பேட்டியில், “மேக வெடிப்பைத் தொடர்ந்து, மண்டியில் வெள்ளம் போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக துனக் பகுதி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் சாலை இணைப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், எங்கள் அரசும் நிர்வாகமும் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. மேலும் நிவாரணப் பணிகளும் நடந்து வருகின்றன. சாலை இணைப்பு மீட்டெடுக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பகுதியிலும் எங்கள் குழுக்கள் உள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாங்கள் குழுக்களை உருவாக்கியுள்ளோம், அவற்றுக்கு தலைவர்கள் உள்ளனர்,” என்று தெரிவித்தார். இதனிடையே அதிகாரிகள் கூறுகையில், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு நிவாரண நடவடிக்கைகளை தனிப்பட்ட முறையில் மேற்பார்வையிடுகிறார். அதோடு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசின் முழு ஆதரவையும் அவர் உறுதி செய்துள்ளார் என்றனர்.

பர்மிங்ஹாமில் மழை..! இந்தியா – இங்கிலாந்து போட்டி நடைபெறுமா?

BJP MP from Mandi and actress Kangana Ranaut, along with Himachal Pradesh Leader of Opposition (LoP) and former Chief Minister Jairam Thakur, visited the cloudburst-affected areas of Mandi district on Sunday and interacted with local residents.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest