
மேட்டூர் அணை உபரி நீரில் அடித்துச் செல்லப்பட்ட முதியவர் ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேட்டூர் அணையின், நீர்மட்டம் நடப்பாண்டில் மூன்றாவது முறையாக முழு கொள்ளவான 120 அடியை ஞாயிற்றுக்கிழமை எட்டியது. காலை 8 மணிக்கு உபரி நீர் திறப்பதாக நீர் வளத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் 8 மணிக்கு திறக்கப்பட்டது.
இதனால் பெரியார் நகர் கால்வாயில் நின்று கொண்டிருந்த முதியவர் சடையன் (60) நீரில் அடித்துச் செல்லப்பட்டார். இதனைக் கண்ட அருகில் இருந்த மீனவர்கள் ஒடிச் சென்று முதியவரை காப்பாற்றி கரைக்கு கொண்டு வந்தனர்.
மழைக்காலக் கூட்டத்தொடர்: அனைத்துக் கட்சிக் கூட்டம் தொடங்கியது!
ஆபத்தான நிலையில் உள்ள முதியவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீர்வளத்துறை அதிகாரிகள் அலட்சியம் காரணமாக முதியவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர்.