
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.83 அடியாக குறைந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வந்தது.
இன்று காலை 8:00மணிக்கு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,625 கன அடியிலிருந்து வினாடிக்கு 13,820 கனஅடியாக குறைந்தது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 119.96 அடியிலிருந்து 119.83 அடியாககுறைந்தது. அணையின் நீர் இருப்பு 93.20 டிஎம்சியாக உள்ளது.