2_8_sl188dmettur_1810chn_121

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 17,069 கனஅடியிலிருந்து வினாடிக்கு 14,269 கன அடியாக சரிந்தது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 15,000 கனஅடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்டம் மதகுகள் வழியாக வினாடிக்கு 800 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 119.71 அடியிலிருந்து 119.59அடியாக சரிந்தது. அணையின் தற்போதைய நீர் இருப்பு 92.81 டிஎம்சியாக உள்ளது.

Mettur Dam water flow!

இதையும் படிக்க : சென்னையில் விடிய, விடிய பெய்த கனமழை! மயிலாப்பூரில் 80 மீ.மி. மழை பதிவு!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest