wwqa

மோகன்லால் படத்தின் டீசர் வசனம் ஃபஹத் ஃபாசில் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் மோகன்லால் நடித்த எம்புரான், துடரும் ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கத்தில் ‘ஹ்ருதயப்பூர்வம்’ படத்தில் மோகன்லால் நடித்து முடித்துள்ளார்.

இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகனன் நடித்திருக்கிறார்.

அண்மையில் வெளியான இப்படத்தின் டீசர் காட்சியில், “மலையாளத்தில் எனக்கு பிடித்த நடிகர் ஃபஹத் ஃபாசில்தான். என்ன ஒரு நடிகர்!” என மோகன்லாலிடம் ஒருவர் சொல்கிறார்.

அதற்கு மோகன்லால், “ஆனால், இன்னும் நல்ல மூத்த நடிகர்கள் இருக்கிறார்கள்” என்கிறார். அதற்கு, ‘இல்லை. ஃபஹத் மட்டும்தான்” என அவர் சொல்ல, நகைச்சுவையாக மோகன்லால் அந்தக் கதாபாத்திரத்தைக் கடந்து செல்கிறார்.

இது நகைச்சுவையாகப் பதிவு செய்யப்பட்டாலும் சமூக வலைதளங்களில் சிலர், ‘மலையாளப் படமென்றாலே பலருக்கும் ஃபஹத் ஃபாசில்தான் தெரிகிறார். அவரைவிடவும் நல்ல நடிகர்கள் இருக்கின்றனர். ஆனால், ஃபஹத் ஃபாசிலை அறிந்து வைத்திருந்தால் மலையாள சினிமாவையே தெரிந்ததுபோல் பேசுகின்றனர். அதற்காகத்தான் மோகன்லால் ஒரு குட்டு வைத்திருக்கிறார்” என்கிற வகையில் பதிவிட்டு வருகின்றனர்.

இதைக் கண்ட ஃபஹத் ஃபாசில் ரசிகர்களுக்கு சங்கடம் ஏற்பட்டதால் சிலர் ஹிருதயப்பூர்வம் டீசரை விமர்சிக்கவும் செய்கின்றனர்.

இதையும் படிக்க: ஏகே – 64: ரிஸ்க் எடுக்கும் தயாரிப்பு நிறுவனம்?

hridayapoorvam teaser makes some little controversy about mohanlal and fahadh faasil.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest