
மோட்டோரோலா நிறுவனத்தில் புதிதாக ஜி 96 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் சிறப்பம்சங்கள் குறித்து பயனர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில், தற்போது அதன் முழு விவரங்களும் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்பு மோட்டோரோலா ஜி86 ஸ்மார்ட்போன் அறிமுகமான நிலையில், தற்போது ஜி வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மோட்டோரோலா நிறுவனம் அடுத்தடுத்து புதிய தயாரிப்புகளை தனது பயனர்களுக்கு அறிமுகம் செய்து வருகிறது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
மோட்டோரோலா ஜி 96 ஸ்மார்ட்போனானது ஸ்நாப்டிராகன் 7 எஸ் இராண்டாம் தலைமுறை புராசஸர் உடையது.
8GB உள் நினைவகமும் 256GB வரை நினைவகம் கொண்டது.
நான்கு வகையான நிறங்கள் கொண்டது. பச்சை, இருவகை நீலம், ஊதா நிறங்களில் வருகின்றன.
6.67 அங்குல ஓஎல்இடி திரையுடையது. திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 1,600 nits திறனுடையது. திரை பயன்படுத்துவதற்கு சுமூகமாக இருக்கும் வகையில் 144Hz திறன் கொண்டது.
பின்புறம் 50MP கேமராவுடன் சோனி லைடியா 700சி சென்சார் உள்ளது. முன்பக்கம் 32MP செல்ஃபி கேமரா உடையது.
5,500mAh பேட்டரி திறனுடன் வேகமாக சார்ஜ் செய்யும் வகையில் 33W திறன் கொண்டது. வயர் இல்லாமல் சார்ஜ் செய்யலாம்.
8GB + 128GB நினைவகமுடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 17,999.
8GB + 256GB நினைவகமுடைய ஸ்மார்ட்போன் விலை ரூ. 19,999.
இதையும் படிக்க | ஆப்பிள் சிஓஓ பதவிக்கு இந்திய வம்சாவளி நியமனம்! சம்பளம், பொறுப்புகள் என்னென்ன?