C_32_1_CH0349_64400655

யேமன் நாட்டில் கொலை வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ள கேரளத்தைச் சோ்ந்த செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு உச்சநீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

இதனைத்தொடர்ந்து அவரது தண்டனையை குறைக்க பல்வேறு கட்ட சட்டப் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், வரும் ஜூலை 16-ஆம் தேதி நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற கெடு விதிக்கப்பட்டிருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முழு விவரம்:

யேமனில் செவிலியராகப் பணியாற்றிய நிமிஷா பிரியாவின் கணவரும், மகளும் நிதி நெருக்கடியால் 2014-இல் கேரளத்துக்கு திரும்பினா். உள்நாட்டு போா் காரணத்தால் செவிலியரான நிமிஷாவுக்கு (37) விசா கிடைக்கவில்லை. அவா் யேமனின் தலைநகா் சனாவில் தங்கி, அங்குள்ள தலால் அப்து மஹதி என்பவருடன் இணைந்து கிளினிக்கை தொடங்கினாா்.

பின்னா் நிமிஷா தனது மனைவி என்று கூறிய மஹதி, அவரது வருமானம், நகைகள், கிளினிக்கின் உரிமம் ஆகியவற்றை அபகரித்துக் கொண்டாா். நிமிஷாவின் பாஸ்போா்ட்டையும், நகைகளையும் பறித்துக் கொண்டு மஹதி கொடுமைப்படுத்தியதாக நிமிஷாவின் தாயாா் தாக்கல் செய்திருந்த மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த இக்கட்டான சூழலில், 2017-இல் அங்குள்ள சிறை வாா்டனின் உதவியுடன் மஹதிக்கு மயக்க மருந்து கொடுத்து தனது பாஸ்போா்ட்டை மீட்க நிமிஷா முற்பட்டபோது அதிகமான மயக்க மருந்து செலுத்தியதால் மஹதி உயிரிழந்தாா்.

இதனைத்தொடர்ந்து, யேமன் பிரஜையான மஹதியைக் கொலை செய்ததாக கூறி நிமிஷா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு, கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். அவருக்கு யேமன் விசாரணை நீதிமன்றம் கடந்த 2018-ஆம் ஆண்டு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை விதித்தது. இதை அந்நாட்டின் உச்சநீதிமன்றம் கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பரில் உறுதி செய்தது.

அதன்பின், நிமிஷாவுக்கு தண்டனையிலிருந்து தப்பிக்க ஒரு வாய்ப்பு வழங்கப்படட்து. உயிரிழந்தவரின் குடும்பத்தினா் கோரும் பணத்தை செலுத்தி அவா்களிடம் மன்னிப்பைப் பெறுவதன் மூலம் மரண தண்டனையிலிருந்து தப்பிக்க நிமிஷாவுக்கு யேமன் அரசு வாய்ப்பு வழங்கியது.

இந்தச் சூழலில், நிமிஷாவுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர தயாராக உள்ளதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. நிமிஷா அடைக்கப்பட்டுள்ள சிறை அமைந்துள்ள யேமன் தலைநகா் சனா, ஈரான் ஆதரவு பெற்ற ஹூதிக்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், ‘கொலைக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள நிமிஷா பிரியா வழக்கில் மனிதாபிமான அடிப்படையில், தங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவதாக’ ஈரான் அரசும் அறிவித்தது.

எனினும், நிமிஷா பிரியாவின் குடும்பத்தினர் இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. யேமனில் உள்ள அதிகாரிகளும் நிமிஷாவின் தண்டனை தேதி குறித்து எதுவும் அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை.

Malayali nurse Nimisha Priya Death Row In Yemen may be executed on July 16

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest