
காங்கிரஸ் எம்.பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதியான ரே பரேலிக்கு அவர் மேற்கொள்ள திட்டமிடப்பட்ட பயணம், தற்போது ரத்து செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
உத்தரப் பிரதேசத்திலுள்ள ரே பரேலி மக்களவைத் தொகுதியின், உறுப்பினரான ராகுல் காந்தி, இன்று (ஜூலை 16) லக்னௌ நகருக்கு வருகைத் தருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
பின்னர், அங்கிருந்து நாளை (ஜூலை 17) அவர் தனது சொந்த தொகுதியான ரே பரேலியிலுள்ள, உஞ்சாஹர் மற்றும் சதார் சட்டமன்றத் தொகுதிகளின் பூத் கமிட்டி பணியாளர்களைச் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், ராகுல் காந்தியின் ரே பரேலி பயணமானது, தவிக்கமுடியாத காரணங்களினால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவரது வருகைக்கான புதிய தேதிகள் அறிவிக்கப்படும் எனவும் அம்மாவட்ட காங்கிரஸ் தலைவர் பங்கஜ் திவாரி தெரிவித்துள்ளார்.
தற்போது ரத்து செய்யப்பட்டுள்ள இந்தப் பயணத்தில், ஹர்சந்த்பூர் சட்டமன்றத் தொகுதியின் பணியாளர்களையும் நேரில் சந்தித்து, பின்னர் சிறப்பு விமானம் மூலம் அவர் அங்கிருந்து கொச்சிக்கு செல்ல திட்டமிடப்பட்டிருந்து குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மக்களுக்கு பாதுகாப்பில்லை! -மம்தா பானர்ஜி