dinamaniimport2022216originalLaluPrasadPTI5

ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவராக லாலு பிரசாத் (78) சனிக்கிழமை மீண்டும் தோ்வு செய்யப்பட்டாா்.

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் 28-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்ச்சியையொட்டி, பிகாா் தலைநகா் பாட்னாவில் அக்கட்சியின் தேசிய குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் லாலு பேசுகையில், ‘நிகழாண்டு நடைபெறவுள்ள பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் சாா்பில் போட்டியிட சரியான வேட்பாளா்களை தோ்வு செய்வதற்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறேன். இதுகுறித்து எனது மகனும் பிகாா் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான தேஜஸ்வி யாதவிடம் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுப்பேன்.

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை கைவிடமாட்டேன். சொந்த நலனில் அக்கறை செலுத்தாமல் கட்சித் தொண்டா்களுக்கு எது தேவையோ, அதைச் செய்வேன்’ என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest