
கூலி திரைப்படத்தின் வணிகம் விநியோகஸ்தர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் கடந்த ஆக.14 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற கூலி படம் தற்போது அமோசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது.
ஓடிடி வெளியீட்டிலும் கடுமையான எதிர்வினைகளைச் சந்தித்து வருவதால் பிரம்மாண்ட பட்ஜெடில் உருவான சுமாரான திரைப்படம் என்கிற பெயரையே பெற்றுள்ளது.
அதேநேரம், இப்படம் ரூ. 500 கோடி வரை வசூலித்து வணிக ரீதியான வெற்றியை ஈட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால், வெளிநாடுகளில் ரூ. 180 கோடி வரை வசூலித்தும் அனைத்து விநியோகஸ்தர்களுக்கும் இழப்பையே அளித்திருக்கிறதாம்.
மேலும், தமிழ்நாட்டில் ரூ. 200 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு இறுதியில் ரூ.147 கோடி மட்டுமே வசூலித்து இங்கும் ஏமாற்றத்தையே அளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஜினியின் மூன்றாவது அதிக வசூல் திரைப்படமான கூலி அதிகம் வசூலித்த தமிழ்த் திரைப்படங்களில் 4-வது இடத்தைப் பெற்றுள்ளது.
இதுவரை அதிகம் வசூலித்த தமிழ்ப் படங்கள்:
1. 2.0 (ரூ. 662 கோடி)
2. லியோ (ரூ. 617 கோடி)
3. ஜெயிலர் (ரூ. 605 கோடி)
4. கூலி (ரூ. 515 கோடி)
5. பொன்னியின் செல்வன் – 1 (ரூ. 492 கோடி)
(வசூல் தொகைகள் அதிகாரப்பூர்வமானது அல்ல. தகவல்கள் என்பதால் தோராயமாகவே கூறப்பட்டிருக்கிறது.)
இதையும் படிக்க: லோகாவால் இந்த அபாயம் இருக்கிறது: ஜித்து ஜோசஃப்